`வணங்கான்’ அடுத்து `வாடிவாசல்’ படமும் கைவிடப்படுகிறதா?

`வணங்கான்’ அடுத்து `வாடிவாசல்’ படமும் கைவிடப்படுகிறதா?

‘வணங்கான்’ படத்தை அடுத்து நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படமும் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா, இயக்குநர் பாலாவுடன் ஒப்பந்தமாகி இருந்த ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சூர்யா விலகிய நிலையில், அவரது கதாபாத்திரத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது ‘வணங்கான்’ படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறனுடன் கைக்கோர்த்த ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்படும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருக்கும் வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்திருக்கும் ‘வாடிவாசல்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது இதன் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு தாமதமாகிக் கொண்டே செல்வதால் கைவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in