சர்ச்சைக்குப் பிறகு இணைக்கப்பட்ட ரஜினி பாடல்... வைரமுத்து பகிர்ந்த தகவல்!

ரஜினிகாந்த், வைரமுத்து
ரஜினிகாந்த், வைரமுத்து

சர்ச்சைகளுக்குப் பிறகு இணைக்கப்பட்ட பாடல் இது என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எழுதிய பாடல்கள் குறித்தான சுவாரஸ்ய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருவது வழக்கம்.

அந்த வகையில், 1989-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் குறித்தான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

ராஜா சின்ன ரோஜா
ராஜா சின்ன ரோஜா

சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அந்த வகையில் சமூக அக்கறையோடு இப்படத்தில் இடம்பெற்ற 'பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை' என்கிற வைரமுத்து வரிகளில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலை நீக்க வேண்டும் என இந்த படத்தை தயாரித்த ஏவிஎம் புரொடக்சன்ஸ் கூறியதையும், பின்னர் அந்த பாடல் இணைக்க பட்டது குறித்தும் வைரமுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நான் எழுதிய ஒரு பாடல் படத்தின் வேகத்தைக் குறைக்கிறதென்றும் நீக்கப்பட வேண்டுமென்றும் ஏவிஎம் நிறுவனம் முடிவுசெய்தது.  ஒரு கலைச்சோகம் என்னைச் சூழ்ந்தது.

போதைக்கு எதிரான அந்தப் பாடல் சமூக அக்கறைக்காக விருதுபெறும் என்று வாதிட்டு இடம்பெறச் செய்தேன். படம் வெளியானது. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அந்தப் பாடலைக் கொண்டாடி லயோலா கல்லூரியில் விருதளித்துப் பாராட்டினார்கள். என்னைத் தவிரப் பலரும் சென்று விருது பெற்றார்கள். அந்தப் பாட்டு இன்று காலத்தின் தேவையாகிவிட்டது’ என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in