நடிகர் கவினுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த தனுஷ்!

 நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்நடிகர் கவினுக்கு இன்பதிர்ச்சிக் கொடுத்த தனுஷ்..!

நடிகர் தனுஷ் ’’டாடா’’ கதாநாயகன் கவினுக்கு செல்போனில் அழைத்து பாராட்டிய நிலையில், அதற்கு நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கவின் நடிப்பில், இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான திரைப்படம், டாடா. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

தந்தை மகன் உறவை விவரிக்கும் இந்த படத்தை, நடிகர் தனுஷ் ’’டாடா’’ கதாநாயகன் கவினை செல்போனில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் தனுஷுக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.

 நடிகர் தனுஷ் - க்கு கவின் நன்றி கடிதம்
நடிகர் தனுஷ் - க்கு கவின் நன்றி கடிதம் நடிகர் கவினுக்கு இன்பதிர்ச்சிக் கொடுத்த தனுஷ்..!

அதில், ‘’ ஹாய் கவின், நா தனுஷ் பேசுறேன்.. நான் இதைக்கேட்டதும் இது உண்மைதானா என நம்பமுடியாமல் சில நிமிடம் அப்படியே நின்றேன். நிஜம் என்னவென்றால், நான் இன்னும் அந்த ஃப்ளாஷிலிருந்து வெளியே வரவில்லை. இதோ நான் டைப் செய்கிறேன்.

டாடாவைப் பார்த்துவிட்டு தனுஷ் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மையில் ஒரு மறக்கமுடியாத தருணம். உங்கள் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது நினைவிருக்கிறது.

உங்கள் சிறந்த திறமையைக் கண்டு வியந்தேன். இன்று, உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவதை நன்றியால் சுருக்க முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சார்.

வாத்தி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் உங்களிடமிருந்து சிறந்த சினிமாவைப் பார்க்க எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in