ஆஸ்கர் நாமினேஷனுக்கு சென்றது காந்தாரா!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த இந்திய படைப்பு
ஆஸ்கர் நாமினேஷனுக்கு சென்றது காந்தாரா!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தொடர்ந்து காந்தாரா திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜர் கிரகந்துர் இதனை உறுதி செய்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனுக்கு சென்றதில் வியப்பில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் தொடக்கமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியுடனான பான் இந்திய வெளியீடு, சர்வதேச விருதுகளுக்கு குறி என்ற உறுதியுடன் உருவானது. எதிர்பார்த்தது போலவே தனது பான் இந்திய வெளியீட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் படைத்ததுடன், சர்வதேச விருதுகளையும் குறிவைத்து ஆர்ஆர்ஆர் திரைப்படம் முன்னேறி வருகிறது.

நியூயார்க் ஃபிலிம் க்ரிட்டிக் சர்க்கிள், சாட்டர்ன் அவார்ட்ஸ், அட்லாண்டா ஃபிலிம் க்ரிட்டிக் என சர்வதேச விமர்சகர்கள் விருதுகளுடன், கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் நாமினேஷனிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சேர்ந்திருக்கிறது. ஆனால் இதற்கு முற்றிலும் எதிர் திசையிலிருந்து காந்தாரா திரைப்படம் தனது பயணத்தை தொடங்கியது.

சொற்ப பட்ஜெட்டில் மிகவும் சாதரணமாக உருவான ’காந்தாரா’ கன்னட திரைப்படத்துக்கு, தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு கிடைத்த பிறகே, அந்த மொழிகளில் டப் செய்யப்பட்டது. சற்று இடைவெளியில் இந்தியிலும், சர்வதேச ரசிகர்களுக்காக ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது. காந்தாரா படைப்பாளர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பான் இந்திய வெளியீட்டுக்கு திரைப்படம் தன்னை உயர்த்திக்கொண்டது. இதன் பின்னணியில், நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோரின் உழைப்பு இருந்தது. திரைப்படத்தின் உள்ளடக்கம் காரணமாக ரசிகர்களின் வாய்வழி பிரல்யம் மூலமாகவே தனக்கான வெற்றியை காந்தாரா திருத்தி எழுதியது.

பாலிவுட்டில் புதிதாக வெளியாகும் இந்தி திரைப்படங்களின் தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டு அளவுக்கு காந்தாரா அங்கே வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகள் மற்றும் வசூல் குவிப்புக்கு அடுத்தபடியாகவே, காந்தாரா தனக்கான விருது அங்கீகாரத்துக்கு அடியெடுத்தது. படக்குழுவினரின் அயராத முயற்சிகளால் தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படத்துடன் காந்தாராவும் ஆஸ்கர் நாமினேஷனுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது அறிவிப்புக்கு இணையாக அதன் நாமினேஷன் இறுதிப் பட்டியலை, காந்தாரா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in