`நண்பர்களே பாடம் கற்றுக்கொண்டேன்’: மருத்துவமனையில் இருந்து திரும்பினார் பிரபல நடிகர்!

`நண்பர்களே பாடம் கற்றுக்கொண்டேன்’: மருத்துவமனையில் இருந்து திரும்பினார் பிரபல நடிகர்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, வீடு திரும்பினார்.

இந்தி திரையுலகின் மூத்த நடிகர் தர்மேந்திரா. நடிகை ஹேமமாலினியின் கணவராக இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோகரின் ‘ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோருடன் ’அப்னே’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து மருத்துவமனையில் வீடு திரும்பியுள்ளார்.

இதை வீடியோ மூலமாக தெரிவித்துள்ள நடிகர் தர்மேந்திரா, ’சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தே. இப்போது குணமடைந்துவிட்டேன். கவலைப்பட வேண்டாம். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. இனி உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பேன். நண்பர்களே நான் பாடம் கற்றுக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in