
ராஷ்மிகாவைத் தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃபின் மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் மாற்றம் செய்து நேற்று மர்மநபர்கள் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அமிதாப் உள்ளிட்டப் பலரும் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகை ராஷ்மிகாவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில்,நடிகை கத்ரீனா கைஃப் இது போன்ற மார்ஃபிங் புகைப்பட சர்ச்சையில் இன்று சிக்கியுள்ளார். கத்ரீனா நடித்த ’டைகர் 3’ படத்தில் டவல் அணிந்து குளியலறை சண்டைக்காட்சியில் நடித்திருந்தார்.
அந்த காட்சியை தான் இப்போது ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சிலர் பரப்பி விட்டுள்ளனர். இது குறித்து ‘டைகர்3’ படக்குழு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், இதை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் விதமாக இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்