குவைத்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் ‘பீஸ்ட்’டுக்குப் பிரச்சினை!

குவைத்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் ‘பீஸ்ட்’டுக்குப் பிரச்சினை!

விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ’பீஸ்ட்’. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் நடிகர் விஜய், இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரியாக நடித்துள்ளார்.

பீஸ்ட், விஜய், பூஜா ஹெக்டே
பீஸ்ட், விஜய், பூஜா ஹெக்டே

ஏப்ரல் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில், பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இருப்பதாலும் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாலும் குவைத்தில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதே காரணத்திற்காக, துல்கர் சல்மான் நடித்த 'குரூப்', விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' படங்களுக்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில். குவைத் நாட்டைத் தொடர்ந்து கத்தாரிலும் ‘பீஸ்ட்’ படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.