`பாபா’ படத்தைத் தொடர்ந்து `சிவாஜி’ படமும் ரீ-ரிலீஸ்!

`பாபா’ படத்தைத் தொடர்ந்து `சிவாஜி’ படமும் ரீ-ரிலீஸ்!

நடிகர் ரஜினியின் ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ‘சிவாஜி’ படமும் மறு வெளியீடு செய்யப்பட இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ‘சிவாஜி’ படமும் மறு வெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி ‘பாபா’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்டு திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ’பாபா’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷ்ரேயா உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘சிவாஜி’ திரைப்படமும் பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளில் 9-ல் இருந்து 15-ம் தேதி வரை ஒளிபரப்பாக இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ திரைப்படம் கருப்பு பணத்தை மையமாகக் கொண்ட கதை. இந்தப் படமும் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது.

’பாபா’, ‘சிவாஜி’ என மீண்டும் வெளியாக இருக்கும் இந்தப் படங்கள் குறித்தான செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in