ஷங்கர் படத்தின் அடுத்த ஷெட்யூல் எப்போது?

ஷங்கர் படத்தின் அடுத்த ஷெட்யூல் எப்போது?

ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தில் ராஜூ, ஷங்கர், ராம் சரண்
தில் ராஜூ, ஷங்கர், ராம் சரண்

இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு, ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி பகுதிகளில் நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ’ஆச்சார்யா’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார் ராம் சரண். அந்தப் படம் ரிலீஸ் ஆனதை அடுத்து ஷங்கர் பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துகொள்கிறார்.

கியாரா அத்வானி
கியாரா அத்வானி

இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. அதில் ராம் சரண், கியாரா அத்வானி உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்தப் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் ராம் சரணுக்கு பலவித கெட்டப்புகள் இருக்கிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று ராம் சரண் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in