9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக மோதும் விஜய் - அஜித்: உற்சாகத்தில் திளைக்கும் ரசிகர்கள்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக மோதும் விஜய் - அஜித்: உற்சாகத்தில் திளைக்கும் ரசிகர்கள்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகவுள்ளன. இதனால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் இவர்கள் இருவரும் நடித்த படங்கள் கடைசியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வெளியானது. 2014ம் ஆண்டில் விஜய் நடித்த ‘ஜில்லா’ மற்றும் அஜித் நடித்த ‘வீரம்’ படங்கள் ஒன்றாக வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தையும் பெற்றது. அதன்பின்னர் இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகவில்லை.

தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் இன்னும் பெயரிடப்படாத ‘ஏகே-61’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் பொங்கல் பண்டிகைக்குத்தான் படம் ரிலீஸாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. எனவே அடுத்த படத்தில் சொல்லி அடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுபோல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இருவரின் ரசிகர்களும் ஒரு ‘பிளாக்பஸ்டர்’ ஹிட் கொடுக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in