கேரள அரசுக்கு இலவசமாக நிலம் கொடுத்த அடூர்!

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், கேரள அரசுக்கு தனது பூர்வீக இடத்தை இலவசமாக வழங்க முன் வந்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் (80). 'எலி பத்தாயம்’, ‘நாலு பெண்ணுகள்’, 'சுயம்வரம்’ உட்பட பல புகழ்பெற்றத் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், 16 தேசிய விருதுகள், 17 கேரள மாநில விருதுகள், பல சர்வதேச விருதுகள், தாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

அமைச்சர் கோவிந்தனுடன் அடூர் கோபாலகிருஷ்ணன்
அமைச்சர் கோவிந்தனுடன் அடூர் கோபாலகிருஷ்ணன்

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக அதிக நிலம் உள்ளவர்கள், இலவசமாக அரசுக்கு நிலம் வழங்க முன்வரவேண்டும் என்று மாநில அமைச்சர் கோவிந்தன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, தனது சொந்த ஊரான அடூரில் உள்ள பூர்வீக நிலத்தில், 13.5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்க அடூர் கோபாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் கோவிந்தனிடம், அடூர் கோபாலகிருஷ்ணன் நேரில் விவரம் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மற்றவர்கள் இதைப் பின்பற்றுவதற்கு சிறந்த முன்னுதாரணமாக அடூரின் செயல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in