இமயமலை பைக் பயணம்: அஜித்துடன் சென்ற அதிமுக பிரமுகர் யார்?

இமயமலை பைக் பயணம்: அஜித்துடன் சென்ற அதிமுக பிரமுகர் யார்?

நடிகர் அஜித்தின் இமயமலை பைக் பயணத்தில் அவருடன் அதிமுக பிரமுகர் ஒருவரும் சென்றுள்ளது தெரியவந்திருக்கிறது.

நடிகர் அஜித் சினிமாவைத் தாண்டி பல்வேறு விஷயங்களில் ஆர்வம் செலுத்துபவர். கார் ரேஸ் தொடங்கி துப்பாக்கி சுடும் போட்டி வரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார். திடீரென ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடுவார்.

குறிப்பாக அஜித்தின் ‘பைக்’ காதல் தமிழ்க்கூறும் நல்லுலகம் அறிந்த செய்தி. குறிப்பாக, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் பயணம் தொடங்கி பல இடங்களுக்குச் சென்றுவருவார். சமீபத்தில் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ர ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

நடிகர் அஜித்துடன் அதிமுக பிரமுகர் வசந்த்
நடிகர் அஜித்துடன் அதிமுக பிரமுகர் வசந்த்

இந்தியா திரும்பியவர், திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்துவரும் அஜித், படப்பிடிப்பில் கிடைத்த ஓய்வு நேரத்தில், நண்பர்களுடன் பைக் பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்த முறை இமயமலைப் பகுதிகளில் அவரது பைக் ‘தடம்’ பதித்துவருகிறது. இமாசல பிரதேசத்தின் மலைப் பகுதிகளில் ஜாலி பயணம் மேற்கொண்டிருக்கிறார் அஜித்.

இந்நிலையில், அஜித்துடன் அதிமுக பிரமுகர் ஒருவர் பைக் பயணம் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் யார் எனத் தற்போது தெரியவந்திருக்கிறது.

பொள்ளாச்சி நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலரான வசந்த் என்பவர்தான் அந்த சக பைக் பயணியாம். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அவரைப் போல் பைக் பயணம் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in