இயக்குநர் பாரதிராஜாவுக்கு என்ன ஆயிற்று?: மருத்துவமனையில் திடீர் அனுமதி

இயக்குநர் பாரதிராஜாவுக்கு என்ன ஆயிற்று?: மருத்துவமனையில் திடீர் அனுமதி

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் பாரதிராஜா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜாவிற்கு கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டது. இதனால் சென்னை பயணத்தை ஒத்திவைத்து விட்டு மதுரையிலேயே ஒரு நாள் அவர் தங்கினார். அடுத்த நாள் சென்னை புறப்பட்டுச் சென்றார். இதன் பின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் பாரதிராஜாவிற்கு இன்று திடீரென அஜீரணக்கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என பாரதிராஜா தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in