நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
நடிகா விஜய் சேதுபதிதி இந்து

நடிகர் மகாகாந்தியைத் தாக்கிய வழக்கில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீதான வழக்கு விசாரணையை ஜன.4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “மருத்துவப் பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்த நவ.2-ம் தேதி இரவு, பெங்களூரு சென்றேன். அங்கு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைத் துறையில் அவரது சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்திப் பேசினார்.

மேலும், விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, அவரது மேலாளர் ஜான்சன் என்னைத் தாக்கினார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருக்க மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக அவதூறு பரப்பிய நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் மகாகாந்தி கோரி இருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, ஜன.4-ந் தேதி நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய மேலாளர் ஜான்சன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in