பிரபல நடிகருக்கு கரோனா பாதிப்பு

பிரபல நடிகருக்கு கரோனா பாதிப்பு

பிரபல நடிகருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ். இவர் பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, கூடாச்சாரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ’மேஜர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கைக் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ’ஹிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆத்வி சேஷ் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in