சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் அதிதி ஷங்கர்.

‘டான்’ படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். ’மண்டேலா’ படத்தை இயக்கிய அஸ்வின் மடோனா இந்த படத்தை இயக்கி வருகிறார். ‘பிரின்ஸ்’ படத்தை போலவே ‘மாவீரன்’ படமும் தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கீரா அத்வானி ஆகியோரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார்கள் என பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ‘பிரின்ஸ்’, ’மாவீரன்’ படம் தவிர்த்து சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமியுடன் படம் இணைந்து பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in