கேன்ஸ் விழாவில் பங்கேற்கிறார் பிரபல தமிழ் நடிகை!

கேன்ஸ் விழாவில் பங்கேற்கிறார் பிரபல தமிழ் நடிகை!

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் பங்கேற்கிறார்.

75-வது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் வரும் 17-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவில் பாம் டி’ஓா் (Palme d’Or) விருதுக்காக தோ்வாகியுள்ள 21 படங்களில் ஒரு படம் தோ்ந்தெடுக்கப்பட்டு, நிறைவு நாளில் விருது வழங்கப்படும். சிறந்த படத்தைத் தோ்வு செய்வதற்கு பிரான்ஸ் நடிகா் வின்சன்ட் லிண்டன் தலைமையில் அவர் உட்பட 9 பேர் கொண்ட நடுவா் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து நடிகர்களும், நான்கு நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவராக நடிகை தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளாா். கேன்ஸ் திரைப்பட விழா நடுவா் குழுவில் ஏற்கெனவே மிருனாள் சென், மீரா நாயா், அருந்ததி ராய், ஐஸ்வா்யா ராய், நந்திதா தாஸ், ஷா்மிளா தாகூா், சேகா் கபூா், வித்யா பாலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், இப்பட விழாவில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் பங்கேற்கிறார்.

அவர் விவோ இந்தியா செல்போன் பிராண்டை அங்கு பிரதிநிதிப்படுத்த இருக்கிறார். "கேன்ஸ் விழாவில்,சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெறப்போவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக, இந்த மதிப்புமிக்க விழாவில், இந்தியா சார்பாக விவோவை அறிமுகப்படுத்த இருப்பது உற்சாகமான உணர்வை தருகிறது" என்று அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in