’பிரபாஸ்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

பிரபாஸ், கீர்த்தி சனோன்
பிரபாஸ், கீர்த்தி சனோன்

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனான் நடிக்கும் படம், ’ஆதிபுருஷ்’. ராமாயணக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர். லட்சுமணனாக சன்னி சிங், அனுமனாக தேவ்தத்தா நாகே நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த வருடம் ஜனவரி 12-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

பிரபாஸ், ஓம் ராவத்
பிரபாஸ், ஓம் ராவத்

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே இந்தப் படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

படம் 500 கோடி ரூபாய் செலவில் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகர் பிரபாஸுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகும் மெகா பட்ஜெட் படம் இது என்கிறார்கள் பாலிவுட் திரையுலகினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in