ரசிகர்களை வைத்து மிரட்டுகிறார்கள்: தயாரிப்பாளர் வருத்தம்

ரசிகர்களை வைத்து மிரட்டுகிறார்கள்: தயாரிப்பாளர் வருத்தம்
’அட்ரஸ்’ பாடல் வெளியீட்டு விழா

``நடிகர்களை பற்றி பேசினால், ரசிகர்களை விட்டு மிரட்டுகிறார்கள்'' என்று தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்னார்.

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய இராஜமோகன் இயக்கியுள்ள படம், ’அட்ரஸ்’. அதர்வா முரளி, காளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், ``கரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது. மக்கள் கூட்டமாக வருகிறார்கள். சினிமாவில் பின்னால் இழுப்பதில் குறியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா பற்றி, நடிகர் பற்றி யாரைப் பற்றியும் பேசவில்லை. பேசினால் பிரச்சினை வருகிறது. ரசிகனை விட்டு மிரட்டுகிறார்கள். ரசிகனை விட்டு மிரட்டினால் அவ்வளவுதான்.

இராஜமோகன்
இராஜமோகன்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததும் அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்துள்ளார். ஆனால் இந்த தம்பி அதைத் தொடர்ந்து நடத்தியுள்ளார். அதுமட்டுமல்ல தான் இல்லையென்றால் யார் நடத்துவார்கள் என 8 கோடி ரூபாய் பேங்கில் போட்டு வைத்து, அது தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார். அதுதான் புண்ணியம். இங்கு யார் செய்கிறார்கள்?'' என்றார்.

இயக்குநர் ராஜ்மோகன் கூறும்போது, ``1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது, தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமம் ஒன்றிற்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது’' என்றார்.

Related Stories

No stories found.