அடேயப்பா, ஒரு படத்திற்கு சம்பளம் 15 கோடி: அசத்தும் 'நான் ஈ' நடிகர்!

நடிகர் நானி
நடிகர் நானிஅடேயப்பா, ஒரு படத்திற்கு சம்பளம் 15 கோடி: அசத்தும் 'நான் ஈ' நடிகர்!

தொடர் வெற்றி காரணமாக நடிகர் நானி தனது சம்பளத்தை 8 கோடியில் இருந்து 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்த நடிகர் நானி, முதலில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இதன் பின் ஐதாராபாத்தில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இதன் பின் கடந்த 2008-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'அட்டா சம்மா' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

கடந்த 2011-ம் ஆண்டு 'வெப்பம்' திரைப்படத்தின் மூலம் நானி தமிழில் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படத்தின் மூலம் பிரபலமானார். தெலுங்கில் பிரபல நடிகராக இருந்தாலும் ' நீ தானே என் பொன்வசந்தம்', 'ஆஹா கல்யாணம்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நானி படித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நானி நடித்த 'தசரா' திரைப்படம் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் தரசாவில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார்,ஜரீனா வஹாப் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் நானி ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில், தொடர் வெற்றியால் தற்போது சம்பளத்தை ரூ. 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in