சோஷியல் மீடியா மூலம் கோடிகளைக் குவிக்கும் நடிகை: ஒரு விளம்பர பதிவிற்கு இவ்வளவு கட்டணமா?

ஆலியா பட்.
ஆலியா பட்.

சமூக வலைதளம் மூலம் ஒரு விளம்பர பதிவிற்கு கட்டணமாக ரூ.85 லட்சம் முதல் ஒரு கோடி வரை நடிகை ஆலியா பட் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியின் பிரபல நடிகையாக திகழ்பவர் ஆலியா பட். நடிகர் ரன்வீர் கபூருடன் 5 வருட டேட்டிங்கிற்குப் பிறகு ஏப்ரல் மாதம் அவரைத் திருமணம் செய்து கொண்டார்

திருமணத்திற்குப் பிறகும் ஆலியா பரபரப்பான நடிகையாக உள்ளார். 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி', 'கல் இதயம்' உள்ளிட்ட படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் வெளியிடும் விளம்பரங்களுக்கு ஆலியா பட் பெருமளவு கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு விளம்பர பதிவிற்கு இவர் ரூ.85 லட்சம் முதல் ஒரு கோடி வரை கட்டணமாக வசூலிக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரது இன்ஸ்டா பக்கத்தை சுமார் 68.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதனால் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் இவருக்கு கிடைக்கும் தொகையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in