பிரபல நடிகருடன் நடிகை விமலா ராமன் திருமணம்?

பிரபல நடிகருடன் நடிகை விமலா ராமன் திருமணம்?
வினய், விமலா ராமன்

நடிகை விமலா ராமன் பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் கே.பாலசந்தரின் ’பொய்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விமலா ராமன். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர், பிறகு ராமன் தேடிய சீதை உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பிரபல நடிகர் வினய் ராயும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

நடிகர் வினய், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, அரண்மனை, துப்பறிவாளன், டாக்டர், சமீபத்தில் வெளியான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகை விமலா ராமனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

வினய், விமலா ராமன்
வினய், விமலா ராமன்

இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஆஸ்திரேலியாவில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.