திரும்ப வரேன்... சீமான் மானத்தை வாங்கறேன்... மீண்டும் முருங்கை மரம் ஏறிய விஜயலட்சுமி!

நடிகை விஜயலட்சுமி - சீமான்
நடிகை விஜயலட்சுமி - சீமான்

“திரும்ப வரேன்... சீமான் மானத்தை வாங்கறேன்” என நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சீமான் ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை விஜயலட்சுமி - சீமான்
நடிகை விஜயலட்சுமி - சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு பரபரப்பைக் கிளப்பினார். இதன் பிறகு சீமான் தரப்பு சமாதானம் பேசியதும் அமைதியாகிவிட்டார் விஜயலட்சுமி. சற்றே இடைவெளி விட்டு மீண்டும் இந்த விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பு கிளப்பினார். இப்படி அவர் பேசுவதும், சீமான் தரப்பு சமாதானம் பேசியதும் அமைதியாவதும் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி ஆதரவுடன் சீமான் மீது மீண்டும் புகார் அளித்தார் விஜயலட்சுமி. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திடீரென வழக்கை வாபஸ் பெற்றவர், மீண்டும் கர்நாடகாவுக்கே செல்வதாக செல்வதாகக் கூறினார்.

இப்போது விஜயலட்சுமி சீமான் பற்றி மீண்டும் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் மீண்டும் சென்னை வந்து மீடியா முன்னிலையில் சீமான் மானத்தை வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், “சீமான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீதான வழக்கை மூடி மறைத்து வெளியே உத்தமன் போல பேசுகிறார். இப்போது என்ஐஏ-விடம் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்? ஈழத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதும், தலைவர் கொலை செய்யப்பட்ட போதும் சீமான் என்ன ஆட்டம் போட்டார் என்பதை நான் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டேன்.

நான் தொடர்ந்து வழக்கு அப்படியே உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும்போதுதான் எனது போனைக் கொடுக்க முடியும் என்கிறார்கள். சீமான் தரப்போ இந்த வழக்கை எடுக்கவே மாட்டார்கள் எனக் கூறுகிறார்கள். 14 வருடங்களுக்கு முன்பு நான் போட்ட வழக்கை எடுக்க வேண்டும் என நான் ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுக்க வேண்டுமா?

திரும்பவும் நான் சென்னை வர்றேன். இந்த முறை மீடியா முன்பு எல்லாத்தையும் சொல்கிறேன். சீமான் என்னிடம் எப்படி ஆட்டம் போட்டார், மதுரை செல்வத்தை வைத்து எப்படிப் பேசினார் என்று விளக்கி திரும்பவும் சீமான் மானத்தை வாங்குகிறேன். மாநில அரசும் காவல்துறையும் சீமானை காப்பாற்றிக் கொண்டிருக் கிறது. இனியும் சீமானை விடுவதாக இல்லை” என ஆவசேமாகப் பேசியுள்ளார் விஜயலட்சுமி.

தேர்தலை நோக்கிய அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் போது சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள இந்த வீடியோ மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in