திடீர் திருப்பம்… நள்ளிரவில் பரபரப்பு... சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி!

திடீர் திருப்பம்… நள்ளிரவில் பரபரப்பு... சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி!

நேற்று நள்ளிரவு திடீரென வளசரவாக்கம் காவல்நிலையம் வந்த நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

சீமான் – நடிகை விஜயலட்சுமி விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. வரும் 18ம் தேதி சீமான், காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக கூறியிருந்த நிலையில், திடீர் திருப்பதாக விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, வீரலட்சுமி தன்னைத் தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவரை கண்டித்து வீடியோ வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரும் கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ வழக்கை வாபஸ் பெற வில்லை என்றும் தானாகவே வாபஸ் பெறுவதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார். வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை என்றும், புகார் அளித்த தன்னை பலரும் அவமானப்படுத்துகின்றனர் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிகாரம் உள்ளது. அவரை எதுவும் செய்ய முடியாது என்று தோல்வியை ஒத்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். மேலும் சீமானிடம் காசு வாங்கிக் கொண்டு வழக்கை திரும்பப்பெறவில்லை என்றும் நடிகை விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவருக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை இரண்டு முறை சீமானுக்கு சம்மன் அனுப்பியது.

எனவே, அவர் நாளை மறுநாள் காவல்துறையிடம் நேரில் ஆஜராக இருந்தார். இந்த சூழலில் நள்ளிரவு காவல் நிலையத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். சீமானை எதிர்கொள்ள போதிய ஆதரவு யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in