ஆன்லைனில் கசிந்த பிரபல நடிகையின் நம்பர்: ஆபாச அழைப்பால் அதிர்ச்சி

ஆன்லைனில் கசிந்த பிரபல நடிகையின் நம்பர்: ஆபாச அழைப்பால் அதிர்ச்சி
நடிகை விபூதி தாக்கூர்

என்னுடைய செல்போன் நம்பர் ஆன்லைனில் கசிந்ததால், ஆபாச அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகத் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை விபூதி தாக்கூர். இவர் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவருடைய தொலைபேசி எண்ணை சிலர் ஆன்லைனில் வேண்டுமென்றே பரப்பிவிட்டுள்ளனர். அதோடு, இந்த எண்ணுக்கு போன் செய்து, ’இவரைத் துன்புறுத்துங்கள். பாலியல் அரட்டைக்கும் அழையுங்கள், உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

நடிகை விபூதி தாக்கூர்.
நடிகை விபூதி தாக்கூர்.

இதையடுத்து அவருக்கு ஆபாச அழைப்புகள் வந்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை விபூதி தெரிவித்துள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ள நடிகை விபூதி. ``என் செல்போனை வெளியிட்டு இப்படி பரப்பியுள்ளவர்களை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். இது மிகுந்த மன உளைச்சலை கொடுத்திருக்கிறது.

யார் இதை செய்தாலும் அவர்களின் செயல் வெட்கக்கேடானது. இந்த வாசகம் ஒரு பெண்ணாக என் கண்ணியத்தை இழிவுபடுத்துகிறது. இதுபோன்ற கொடுமையான மனநிலையில் இருந்தபடி, மற்றவர்களை ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என்பது புரியவில்லை. இந்த அவமானகரமான செயலால் எனக்கு குறுஞ்செய்திகள், ஆபாச அழைப்புகள் அதிகமாக வருகின்றன. இதுபற்றி சைபர் க்ரைமில் புகார் கூற இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.