’குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியில் மீண்டும் களமிறங்கும் வனிதா விஜயகுமார்... குழப்பத்தில் ரசிகர்கள்!

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் ‘குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியில் களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இவர் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோவிகா, வனிதா
ஜோவிகா, வனிதா

சின்னத்திரையில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இதன் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட்டுக்குப் பதிலாக நடிகர், செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்குகிறார். இதற்கான புரோமோவும் வெளியாகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் தேர்வும் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படியான சமயத்தில்தான் பிக் பாஸ் கடந்த சீசனில் பங்கேற்ற ஜோவிகா ‘குக் வித் கோமாளி’ சீசன்5-ல் போட்டியாளராக பங்கேற்பாரா என வனிதாவிடம் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துள்ள வனிதா, “ஜோவிகா இப்போது பிஸியாக இருக்கிறார். அவரிடம் தேதிகள் இல்லை. ஆனால், என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் போட்டியாளராகக் களமிறங்குகிறாரா அல்லது கெஸ்ட்டாக வந்து போகிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஒருமுறை போட்டியாளராகப் பங்கேற்றால் மீண்டும் போட்டியாளராகப் பங்கேற்க முடியாது என்பதுதான் விதி. அப்படி இருக்கும்போது வனிதா ஏன் இப்படி சொல்லி இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

அதேபோல, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக கடந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகர்கள் தினேஷ் மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலக்க இருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in