'லியோ' திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் மகன்...டிரெண்டாகும் புகைப்படம்!

விஜயுடன் வனிதா விஜயகுமார்
விஜயுடன் வனிதா விஜயகுமார்

'லியோ' திரைப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்களை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

'லியோ' படத்தில்...
'லியோ' படத்தில்...

ஸ்ரீஹரி தன்னுடைய அம்மாவான வனிதா விஜயகுமாரைப் வை பிரிந்து தன்னோட தந்தையோடு இருக்கும் நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் 'லியோ' திரைப்படத்தில் நடிகர் விஜய், ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர். அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக புகைப்படம் சிலவற்றைக் காட்டுகிறார்.

அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை நேரத்தில் ஸ்ரீஹரி சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சகுனி' என்ற திரைப்படத்திலும் கார்த்தியின் சிறு வயது கேரக்டராக ஸ்ரீஹரி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in