பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்- ஜோவிகாவுக்கு இடையில் தற்போது நடந்து வரும் தீவிர சண்டையில், ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்து வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ்7 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களான மாயா, கூல் சுரேஷ், விசித்திரா, பூர்ணிமா, சரவணம் விக்ரம், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, ரவீனா என தற்போதுள்ள 15 போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு சர்ச்சை கண்டெண்ட்டைக் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த சீசனில் பிக் பாஸ் இல்லமும் பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாகப் பிரிந்துள்ளது. பிக் பாஸ் தமிழில் முதல் முறையாக ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைய இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் இல்லத்தில் ரேங்கிங் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் பிரதீப் முதல் இடத்தையும், ஜோவிகா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோவிகா தனக்கு முதல் இடம் வேண்டும் பிரதீப்பிடம் வாதிட அது இரண்டு பேருக்கும் வார்த்தைப் போராக முடிந்துள்ளது. இதில் பிரதீப் தான் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், ஜோவிகா வசதியான பெண் என்பதால் அந்த முதலிடமும் பிக் பாஸ் பணமும் தனக்குத் தேவை என வாதிட்டார். பதிலுக்கு ஜோவிகாவும் தானும் மிடில் கிளாஸ் பெண்தான் எனக் கூறியுள்ளார். இதற்குதான் வனிதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘ஜோவிகாவின் அம்மா தனது மகளை வளர்ப்பதற்காகக் கஷ்டப்படுகிறார். ஆனால், இந்த வயதில் பணம் சம்பாதிக்க முடியாமல் அதற்காக இந்த சமூகத்தை குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பிரதீப்? தனது தோல்வியை சொல்லி சொல்லியே இந்த நிகழ்ச்சியில் வெற்றிப் பெறலாம் என பிரதீப் நினைக்கிறார்.
இது முற்றிலும் தவறான விவாதம் பிரதீப். ஏழையால் சட்டை, செருப்பு வாங்க முடியாது, அதனால் நடிகனாக வேண்டும். அதனால் படம் தயாரிக்க பணம் தேவை. ஒரு நடிகருக்கு திறமை தேவை, வாய்ப்புகளை பெற இயக்குனர்களை சந்திக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இந்த வாரம் இந்த சண்டை குறித்து கமல்ஹாசன் என்ன சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.