
பிக் பாஸ் சீசன் 7-ல் வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார், போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்து இருக்கிறார்.
பிக் பாஸ் 7வது சீசன் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா, பூர்ணிமா உள்ளிட்ட பல போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். முதல் நபராக நுழைந்த கூல் சுரேஷுக்கு கேப்டன் பதவி கொடுத்த பிக் பாஸ், அடுத்து வரும் போட்டியாளர்களிடம் விவாதம் செய்து அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
இப்பொழுது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் ஒன்பதாவது போட்டியாளராக உள்ளே நுழைந்து இருக்கிறார். இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவேன் என முன்பு வனிதா சொல்லி இருந்தார். இப்பொழுது மீடியா உலகிற்குள் பிக் பாஸ் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”ஜோவிகாவை பிக் பாஸ்க்குள் அனுப்பும் பொழுது பலரும் வேண்டாம் என எதிர்த்தார்கள். ஆனால், அதையும் மீறி அவளுக்கு ஒரு நல்ல மேடை கிடைக்க வேண்டும் என இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளேன். கமல் அருகே அறிமுகமாகும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?” என வனிதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த வனிதா, தனது பஞ்சாயத்து பேச்சுகளால் அந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டினார். அவரைப் போலவே ஜோவிகாவும் ஜொலிப்பாரா அல்லது அவருடைய தனித்தன்மை எவ்வாறு வெளிப்படும் என்பது குறித்து வரும் நாட்களில் பார்க்கலாம்.