
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் தனது மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு வனிதா விஜயகுமார் ரியாக்ட் செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே 400 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ஒரு காட்சியில் தான் 'லியோ' இல்லை என்பதை விஜய் கதாபாத்திரமான பார்த்திபன் நிரூபிக்க தன் மகனுடன் சிறுவயதில் இருக்கும் புகைப்படத்தை காட்டுவார். அந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய் வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரியுடன் எடுத்த புகைப்படம்தான் அது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி இணையத்தில் பலரும் வைரல் செய்து வந்தனர். தனது அனுமதி இல்லாமல் மகனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியது குறித்து வனிதா விஜயகுமார் ரியாக்ட் செய்துள்ளார்.
எனக்கு அது உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது. நான் இதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும், விஜய்க்கும் என்னுடைய சமூக வலைதளத்தில் நன்றியை கூட தெரிவித்திருந்தேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். பொதுவாக திரைப்படங்களில் இறந்து போனவர்களை தான் போட்டோக்களாக வைப்பார்கள். அதற்காக யாரும், யாரிடமும் சென்று அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை.
காரணம், அவர்களே இந்த உலகத்தில் தற்போது இல்லை. ஆனால் அதனை நாம் படத்தில் பார்க்கும் பொழுது அதில் நமக்கு ஒரு விதமான ரிச் ஃபீல் கிடைக்கும். 'லியோ' திரைப்படத்தில் விஜய் காண்பித்த போட்டோ ஸ்ரீஹரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோ தான். அதை படத்தில் வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.