"நல்லவேளை நான் தப்பிச்சேன்" - லியோ படம் குறித்து த்ரிஷா கலகல பேச்சு!

விஜயுடன் த்ரிஷா
விஜயுடன் த்ரிஷா

லியோ படத்தில் நல்ல வேளையாக நான் தப்பித்தேன், என்னை கொல்லாமல் விட்டதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என நடிகை த்ரிஷாவின் பேச்சால் லியோ வெற்றி விழா கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் தமிழகம், இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பெரும் சாதனையை படைத்துள்ள அப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  நேற்று நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த விழாவில்  திரைப்பட நடிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை மேடையில் பேசி பலரையும் மகிழ்வித்தனர். இந்நிலையில் படத்தின் நாயகியான  நடிகை த்ரிஷா  உணர்ச்சி பூர்வமாகவும் கலகலப்பாகவும் பேசினார். 

வெற்றி விழா மேடையில் விஜய்யுடன் த் ரிஷா
வெற்றி விழா மேடையில் விஜய்யுடன் த் ரிஷா

"எனது பால்ய நண்பருடன் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தேன். 

எனது வாழ்நாட்களில் மறக்க முடியாத இனிமையான தருணங்கள் அவை. விஜய் எனது நண்பர் மட்டுமல்ல, நான் விரும்பும் நபரும் கூட. அவரின் மீது அவ்வுளவு அன்பு உள்ளது. 

அமைதி மற்றும் அமைதியுடன் கூடிய வெற்றி தான் சரியான பதிலடியாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  அவரது படங்களில் கதாநாயகிகள் கொல்லப்பட்டு விடுவார்கள். ஆனால் நான் நல்லவேளையாக தப்பித்திருக்கிறேன்.  என்னை  இந்த படத்தில் கொல்லாமல் இருந்ததற்கு, அவருக்கு மிகுந்த நன்றியை நான் தெரிவிக்கிறேன்" என பேசியது அரங்கில் கலகலப்பை ஏற்படுத்தியது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in