முகம் சுழித்து கோபத்தோடு விறுவிறுவென கிளம்பிய த்ரிஷா... தீயாய் பரவும் வீடியோ!

த்ரிஷா
த்ரிஷா

நடிகை த்ரிஷா சென்னை விமான நிலையத்தில் இருந்து முகம் சுளித்தப்படி கோபத்தோடு கிளம்பிச் செல்லும் வீடியோ த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷா இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் த்ரிஷாவுக்காகக் காத்திருந்தனர்.

ஆனால், கோபத்தோடு வெளியே வந்து நிற்காமல் விறுவிறுவென கிளம்பி இருக்கிறார்.

அவரிடம் செய்தியாளர்கள் ‘கில்லி’ படம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கும் பதில் சொல்லாமல் முகத்தை சுழித்துக் கொண்டே காரில் சட்டென ஏறி வண்டி எடுக்கச் சொல்லி விட்டார். இந்த வீடியோ த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

’இதற்கு முன்பு, த்ரிஷாவை இப்படி கோபத்தோடு பார்த்ததே இல்லையே’ என்றும் கேட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பின்னணிப் பாடகி சுசித்ரா த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேட்டி கொடுத்தது இணையத்தில் பேசுபொருளானது.

விஜய்- த்ரிஷா
விஜய்- த்ரிஷா

சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தன்னுடைய புகைப்படங்களை த்ரிஷாவே கொடுத்தார் என்ற ரீதியில் பேசியிருந்தார் சுசித்ரா. மேலும் பார்ட்டி டேருக்காக (Dare) விஜய் வீட்டின் முன்பு த்ரிஷா நடனமாடினார் என்றும் பேசினார் சுச்சி. ‘நான் சரியாக இருந்தாலும் உலகம் குறை கூறுகிறது’ என்று சுசித்ராவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார் த்ரிஷா.

இருந்தாலும் அவரது கோபம் குறையவில்லை என்பது நடிகை த்ரிஷாவின் இந்த செயல் மூலம் தெரிய வந்துள்ளது. ’ஊடகத்திடம் ஏதாவது பேசினால் இன்னும் பிரச்சினை சிக்கலாகி விடும் என்று அவர் ஒன்றும் பேசாமல் சென்றிருக்கிறார்’ என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in