மனம் திறந்த தமன்னா... 'இதற்குத் தான் தென்னிந்தியப் படங்களில் இருந்து விலகியிருக்கிறேன்'!

நடிகை தமன்னா
நடிகை தமன்னா

நடிகை தமன்னா தென்னிந்தியப் படங்களில் இருந்து விலகி இருக்கக் காரணம் இதுதான் எனப் பேசியுள்ளார்.

’அயன்’, ’தோழா’, ‘ஜெயிலர்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. ஆனால், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு அவர் பெரிதாக தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.

தெலுங்கு, பாலிவுட், ஓடிடி என கவனம் செலுத்தி வந்தார். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதைக் குறைத்தது ஏன் என அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து அவர், “தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தமன்னா
தமன்னா

அதிலும் சில படங்களில் என்னுடைய கதாபாத்திரத்தை அந்தக் கதையோடு பொருத்திக் கொள்ள முடியாமல் கூட இருந்தது. சில இயக்குநர்களிடம் அதைப் பற்றி சொல்லியும் கூட எந்தப் பயனும் இல்லாமல் இருந்தது. இதனால், ஒரு கட்டத்திற்கு பிறகு அதுபோன்ற படங்களிலேயே நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஹீரோயிசத்தைக் கொண்டாடும் படங்களில் நான் நடிக்காமல் இருப்பதே சிறந்தது” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in