திருமணத்திற்கு ரெடியான நடிகை தமன்னா: மும்பை பிரபல தொழிலதிபர் தான் கணவரா?

திருமணத்திற்கு ரெடியான நடிகை தமன்னா: மும்பை பிரபல தொழிலதிபர் தான் கணவரா?

பிரபல நடிகை தமன்னாவிற்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு இந்தி படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா, அதே ஆண்டு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 2006-ம் ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார்.

மும்பையைச் சேர்ந்த நடிகை தமன்னா, நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த தமன்னா, 'பாகுபலி' படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர் பார்த்த மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திருமணச்செய்தியை விரைவில் நடிகை தமன்னா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in