
தனது 21வது வயதில் திருமணம் ஆகி உடனே விவாகரத்து ஆனதும் அது தன்னை மனதளவில் பாதித்து விரக்தியில் தற்கொலை செய்ய முடிவெடுத்தது குறித்தும் நடிகை ஸ்வர்ணமால்யா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் ஸ்வர்ணமால்யா. 12வது படித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினிக்கு அக்காவாக இவர் நடித்திருந்ததும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில், தனது திருமண வாழ்வு, விவாகரத்தால் ஏற்பட்ட விரக்தி ஆகியவை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா.
அவர் பேசியிருப்பதாவது, “21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. அவருக்கு 25 வயதுதான் அப்போது. அந்த வயதில் சரி, தவறு எது என எங்களுக்குத் தெரியவில்லை. விவாகரத்தான பிறகு என்னைவிட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் கஷ்டப்படக்கூடாது என்று என்னை அவர்கள் படிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? எதற்கு இப்படி வாழ்கிறோம் என்று தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!