நடுரோட்டில் உயிருக்கு போராடிய வாலிபர்... உடனடியாக காப்பாற்றிய நடிகை

நடுரோட்டில் உயிருக்கு போராடிய வாலிபர்... உடனடியாக காப்பாற்றிய நடிகை

நெஞ்சுவலியால் நடுரோட்டில் சரிந்தவரை நடிகை ஒருவர் மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டிலிருந்து காணாமல் போன, மனநலம் பாதித்த தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி ஒரு ஜீப்பில் வந்துகொண்டிருந்தார். நாள் முழுவதும் தேடியும் காணவில்லை. இதனால் மருத்துவக் கல்லூரி போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்த போலீஸார், அந்த நபருக்கு போனில் தகவல் கூறினர். அப்போது அவர் போனில் சார்ஜ் இல்லாததால், கட் ஆகிவிட்டது.

இந்நிலையில், ஜீப்பில் போலீஸ் ஸ்டேஷன் திரும்பிக் கொண்டிருந்த அந்த நபருக்கு நடுரோட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டது. வாகனத்தை நிறுத்துவிட்டு சாய்ந்தார். ஜீப்பில் அவர் நண்பர்கள் இருவரும் ஒரு குழந்தையும் இருந்தன. அவர்களுக்கு கார் ஓட்டத் தெரியாது. இதனால் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருப்பிக் கொண்டிருந்தார் பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில், வாயை மூடி பேசவும் படத்தில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

நடுரோட்டில் ஒருவர் ஜீப்பில் சாய்ந்து கிடப்பதைக் கண்ட அவர், விசாரித்தார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுடன் நடிகை சுரபியும் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தையை பெற்ற நடிகை சுரபி லட்சுமி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அவர் மனைவியிடம் அழைத்துச் சென்றார். குழந்தையை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பெண், கட்டிப் பிடித்துக்கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பினார் நடிகை சுரபிலட்சுமி.

நடுரோட்டில் நெஞ்சுவலியால் சரிந்த ஒருவரை, நடிகை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.