நடுரோட்டில் நெஞ்சுவலி: நடிகை காப்பாற்றிய இளைஞர் பரிதாப பலி

சுரபி லட்சுமி, முஸ்தபா
சுரபி லட்சுமி, முஸ்தபா
Updated on
1 min read

பிரபல நடிகையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர், மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர், தமிழில், வாயை மூடிப் பேசவும் படத்தில் நடித்துள்ளார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு கோழிக்கோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, சாலையில் நின்றிருந்த ஜீப்பில் இளைஞர் ஒருவர் மயங்கிக் கிடந்ததைக் கண்டார். அவருக்கு நெஞ்சுவலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துவிட்டு, அந்த இளைஞரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் பெயர் முஸ்தபா (39) என்பதும் அங்குள்ள பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சுரபி லட்சுமி
சுரபி லட்சுமி

மருத்துவமனை வரை சென்று அவரை சேர்த்த நடிகை சுரபி லட்சுமியை சமூக வலைதளங்களில் பாராட்டி வந்தனர். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

முஸ்தபா, தன் வீட்டிலிருந்து காணாமல் போன, மனநலம் பாதித்த மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடினார். கிடைக்காததால் மருத்துவக் கல்லூரி போலீஸில் புகார் கொடுத்துவிட்டு ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்த போலீஸார், முஸ்தபாவுக்கு போனில் தகவல் கூறினர்.

இதனால் போலீஸ் ஸ்டேஷன் திரும்பிய போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த நடிகை சுரபி லட்சுமி அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in