வைரல் வீடியோ... கங்கா ஆரத்தியில் பங்கேற்ற சன்னி லியோன்!

கங்கா ஆரத்தியில் சன்னி லியோன்...
கங்கா ஆரத்தியில் சன்னி லியோன்...

வாரணாசியில் புகழ் பெற்ற கங்கா ஆரத்தியில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசம், வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் நடிகை சன்னி லியோன் நேற்று மாலை கலந்து கொண்டார். இவர் நடிகரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அபிஷேக் சிங்குடன் கலந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்னி லியோன் மற்றும் அபிஷேக் சிங் இருவரும் இணைந்து ’தேர் பார்ட்டி’ என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் பாடலுக்கான புரோமோஷனின் ஒரு பகுதியாகவே சன்னி லியோன் கங்கா ஆரத்தியில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. சல்வார் அணிந்து கொண்டு நடிகை சன்னி லியோன் பங்கேற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in