துரத்திய காதல் தோல்வி; துப்பட்டாவில் தொங்கிய நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி!

துரத்திய காதல் தோல்வி; துப்பட்டாவில் தொங்கிய நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி!

காதல் தோல்வி காரணமாகத் திரைப்பட நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழ் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விருகம்பாக்கம் பகுதியில் மல்லிகை அவின்யூவில் உள்ள வீட்டில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) வசித்து வந்தார். ‘வாய்தா’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதற்கு முன்பாக துப்பறிவாளன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தீபாவின் செல்போனுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். அவர் தொடர்ந்து போனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் தீபாவின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, தீபா மின் விசிறியில் துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீஸார் தீபா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் எழுதி வைத்த கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

அதில், தான் ஒருவரை உயிருக்குயிராகக் காதலித்ததாகவும், காதல் கைகூடாத காரணத்தால் இந்த உலகத்தை விட்டுப் பிரிவதாகவும் எழுதியிருததாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in