நீ இல்லாத ஸ்பெஷல் நாள்... திருமண நாளில் மறைந்த கணவர் பற்றி உருகிய சீரியல் நடிகை!

நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா
நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா

”நம்முடைய இரண்டாவது திருமண நாள். நீ இல்லாமல் நான் கொண்டாடுகிறேன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், நீ என்றுமே என்னுடன் தான் இருக்கிறாய்” என்று சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா உருகியுள்ளார்.

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’, சன் டிவியின் ‘நாதஸ்வரம்’, ‘வாணி ராணி’ தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இவருக்கும் அரவிந்த் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் மாரடைப்பால் காலமானார். திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் திடீரென அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கணவருடன் ஸ்ருதி
கணவருடன் ஸ்ருதி

‘உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. உன்னுடைய ஆன்மாவும் எண்ணமும் எப்போதும் எங்களுடனேயே இருந்து எங்களை எப்போதும் பாதுகாக்கும்’ என சொல்லி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது திருமண நாளையொட்டி, தனது கணவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் ஒன்று சேர்த்து நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி. அதில் அவர், ”திருமண நாள் வாழ்த்துகள் அன்பே! நீ என் அருகில் இருப்பதாக நான் உணர்வதை இந்த உலகம் எதைக் கொண்டும் தடுக்க முடியாது. முன்பை விட இப்போதுதான் உன்னை அதிகம் நேசிக்கிறேன். நீ இல்லாமல் இந்த திருமண நாளைக் கொண்டாடுவதாக உலகம் நினைக்கலாம்.

ஆனால், நீ எப்போதுமே என் அருகில் தான் இருக்கிறாய். நான் அழுவது உனக்குப் பிடிக்காது என்பது தெரியும். இந்த நாளில் உனக்குப் பிடித்த விஷயங்களை செய்யப் போகிறேன். நாம் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டி உன்னைப் பெருமைப்படுத்துவேன். வாழ்வின் இன்னொரு பக்கத்தில் உன்னை சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in