பிரம்மாண்டமாக நடந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

பிரம்மாண்டமாக நடந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகை ஸ்ரீப்ரியாயின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகை ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மகள் சினேகா சேதுபதிக்கும் ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் லண்டனில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் இன்று பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்டவர் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, "சினேகாவும் அன்மோல் ஷர்மாவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில் அனைவரின் ஆசிர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறோம்" என்று ஸ்ரீப்ரியா கூறியிருந்தார்.

லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சினேகா சட்டம் பயின்றார். லண்டனிலேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சி படிப்பையும் படித்தார். மணமகன் அன்மோல் சர்மா, லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார். இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் குடியிருந்து வருகிறது.

Related Stories

No stories found.