நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்!

கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

நடிகை ஸ்ரீதேவியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் வரை தனது திறமையாலும் அழகாலும் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. இன்று அவரது 60வது பிறந்தநாள். இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் மயிலு, விஜி என காலம் கடந்து அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் நம்மிடையே வாழ்வார்.

பாலிவுட் வரை கோலோச்சிய ஸ்ரீதேவி தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு வந்தவர், பின்னாளில் கதாநாயகியாகவும் தனக்கான அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார்.

அழகோடு திறமையும் கைக்கூடிய நடிகையான ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரங்களில் '16 வயதினிலே', 'ஜானி', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' ஆகிய படங்கள் உச்சம் என சொல்லலாம். அதிலும் 'ஜானி' படத்தில் பாடகியாக பல இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார் ஸ்ரீதேவி. 'என்னப்பா அந்த பொண்ணு இப்படி நடிக்குது. ஒரு நிமிஷம் அப்படியே நின்னுட்டேன்!' என அசந்து போனாராம் ரஜினி.

'இடைவேளையின் போது ஸ்ரீதேவியை பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். அவர் தனது அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு இருப்பார். அவர் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவார். எத்தனையோ கனமான பாத்திரங்களையும் அசாதாரணமாக செய்துவிடும் ஸ்ரீதேவி அவர் குடும்பத்தில் ஒரு குழந்தையாகவே இருந்தார். அவரது குடும்பமும் அவரை தேவதையாகவே பார்த்தது. எனக்கும் அவருக்கும் காதல் என பல செய்திகள் வந்தது. ஆனால் ஒருபோதும் நாங்கள் அப்படி பழகியதே இல்லை" என்று ஸ்ரீதேவி மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.

தமிழில் கோலோச்சிய அதே சமயம் தெலுங்கு, மலையாளம், இந்தி வரை சென்றார் ஸ்ரீதேவி. அங்கு பல முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அனைவரும் ஸ்ரீதேவியின் கால்ஷீட் பெற தவம் கிடந்தார்கள். அங்கும் ரசிகர்கள் ஸ்ரீதேவியை கொண்டாடினார்கள். பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்தும் கொண்டார். அவர் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உயிரிழந்தார். இன்று ஸ்ரீதேவியின் 60வது பிறந்த தினம் அதற்கான டூடுலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in