நடிகை சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணம்?: மெஹந்தியுடன் வைரலாகும் புகைப்படம்

நடிகை சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணம்?: மெஹந்தியுடன் வைரலாகும் புகைப்படம்

நடிகை சோனியா அகர்வால் மெஹந்தியுடன் காட்சி தரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனால் அவருக்குத் திருமணமா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை சோனியா அகர்வால் 'தமிழில் காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது அவருக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. இதனால் 2006-ம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அத்துடன் அடிக்கடி பேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் சோனியா அகர்வால் தற்போது, தன்னுடைய கையில் மெஹந்தி வரைந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்து உங்களுக்கு மீண்டும் திருமணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு என்னுடைய திருமண மெஹந்தி இவ்வளவு எளிமையாக இருக்காது என்று சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார். அவரின் மெஹந்தி புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in