பிரசன்னாவை விவாகரத்து செய்கிறேனா?- ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்த நடிகை சிநேகா

பிரசன்னாவை விவாகரத்து செய்கிறேனா?- ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்த நடிகை சிநேகா

நடிகை சிநேகா- பிரசன்னா விவாகரத்து என்று வெளியான செய்திகளுக்கு சிநேகா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளான சிநேகா- பிரசன்னா இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். நடிகர் பிரசன்னா, படங்களில் கவனம் செலுத்தி வர நடிகை சிநேகா தற்போது குடும்பம் தேர்ந்தெடுத்தப் படங்கள் மற்றும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சி என கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சிநேகா- பிரசன்னா இருவருக்கும் விவாகரத்து என்ற செய்தி வெளியாகி வந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தியாக இருந்தது. சமீபத்தில் சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா உட்படப் பல பிரபலங்கள் விவாகரத்து என்று அறிவித்ததை அடுத்து இவர்களும் விவாகரத்து செய்தி வந்ததே இதற்குக் காரணம்.

இப்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சிநேகா, தன் கணவர் பிரசன்னாவுடன் இருக்கும்படியான ரொமாண்டிக்கான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து அனைவருக்கும் ‘ஹேப்பி வீக்கெண்ட்’ என்ற செய்தியைப் பகிர்ந்து உள்ளார். இதனை அடுத்து சிநேகா- பிரசன்னா விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in