திருமண வாழ்வில் சலிப்பு வந்தது... நடிகை சிநேகா அதிர்ச்சி தகவல்!

திருமண வாழ்வில் சலிப்பு வந்தது... நடிகை சிநேகா அதிர்ச்சி தகவல்!

பிரசன்னாவுடனான திருமண வாழ்வில் சலிப்பு வந்தது உண்மைதான் என நடிகை சிநேகா சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்கள் சிநேகா- பிரசன்னா இருவருக்கும் கடந்த 2012-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், பிரசன்னாவுடனான திருமண வாழ்க்கை கசந்தது என சிநேகா யூடியூப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“எனக்கும் பிரசன்னாவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு வாரம் தனித்தனியாகதான் இருந்தோம். திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் என்று முடிவான பின்பு, வாடகை வீடு தேடினோம்.

நடிகர்கள் என்பதாலேயே எங்களுக்கு வீடு கிடைப்பதில் கஷ்டம் இருந்தது. பின்பு, ஒரு வழியாக வீடு கிடைத்து செட்டில் ஆனோம். முதல் மூன்று வருடங்கள் காதல், செல்லச் சண்டைகள் என எல்லாமே நன்றாகவே சென்றது. பின்பு மகன் பிறந்ததும் கவனம் முழுக்க அவன் மீது சென்றது. இரண்டாவது குழந்தை பிறந்ததும் இரண்டு பேரையும் நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது” என்று அந்தப் பேட்டியில் சொல்லி இருக்கிறார் சிநேகா.

மேலும், “ஒருகட்டத்தில் இரண்டு பேருக்குமே திருமண வாழ்வில் சலிப்பு வந்தது உண்மைதான். அதனால் அடிக்கடி சண்டை போடுவோம்.

சலிப்பு ஏற்படும்போதெல்லாம், இருவரும் கிளம்பி இரவு டேட்டிங் சென்று விடுவோம். எங்கள் பழைய காதல் கதைகளை பேசுவோம். மீண்டும் எங்களுக்குள் பழைய மகிழ்ச்சி துளிர்விடும். ஆனால், சலிப்பு வந்தது என்பதற்காக நாங்கள் பிரிந்து விட வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று பேசியுள்ளார் சிநேகா.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in