அந்த விஷயம் என்னைக் கடுமையாக பாதித்தது... நடிகை சிநேகா உருக்கம்!

நடிகை சிநேகா
நடிகை சிநேகா

நடிகை சிநேகா இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தன்னைப் பற்றி வந்த கிசுகிசுக்களை எதிர்கொண்ட விதம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிநேகா. விஜய், அஜித், கமல், தனுஷ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த 2012ம் வருடம் காதல் திருமணம் நடந்தது. தற்போது சிநேகா தனது குடும்பம், ரியாலிட்டி ஷோ, அவ்வப்போது சினிமா என கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிநேகாவின் பிஸியான ஆரம்ப கால சினிமாவில் பல நடிகர்களுடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் வந்துள்ளது. அதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

நடிகை சிநேகா
நடிகை சிநேகா

அவர் கூறியிருப்பதாவது, “என்னைப் பற்றி இனிமேல் என்ன புதிதாக எழுதிவிட முடியும் எனும் அளவுக்கு நிறைய கிசுகிசுக்கள் எழுதிவிட்டனர். அவை ஆரம்ப காலத்தில் என்னை கடுமையாகப் பாதித்தது. எந்த ஆதாரமும் இல்லாமல் பத்திரிகைப் பக்கத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்ற கோபமும் இருந்தது.

நடிகை சிநேகா
நடிகை சிநேகா

இதுபற்றி ஒரு பத்திரிகையாளரிடம், ’இதேபோல, உங்களை ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி எழுதினால் உங்கள் குடும்பம் என்னவாகும்?’ எனக் கேட்டபோது அவர் பதில் சொல்லவே இல்லை. பின்பு இதுபற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். என் வேலையும் பிஸியாகி விட்டது’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in