’குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு சீக்கிரம் டும் டும் டும்? வைரல் பதிவு!

சிவாங்கி
சிவாங்கி

’சோஷியல் மீடியாவைத் திறந்தாலே எல்லோருக்கும் திருமணம், நிச்சயதார்த்தம் என்பதை பார்க்க முடிகிறது. நானும் அப்போது திருமணம் செய்து கொள்ளும் கட்டத்தில் இருக்கிறேனா?’ என ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிவாங்கிக்கு கல்யாண ஆசை வந்துருச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர், நடிகைகளுக்கு திருமணம், நிச்சயதார்த்தம் என்பது போன்ற செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த சந்தோஷமான தருணங்களைப் பார்த்த பாடகி, நடிகை சிவாங்கி தன்னுடைய திருமணம் ஆசையையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது அவருடைய பதிவில், “சோஷியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தைப் பிறக்கப் போகிறது என எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என் நண்பர்களுடைய பதிவும் அப்படித்தான் இருக்கிறது. அப்போது நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?” எனக் கேட்டுள்ளார்.

சிவாங்கியின் இந்தப் பதிவைப் பார்த்த பலரும் சிவாங்கிக்குத் திருமண ஆசை வந்துவிட்டது எனக் கூறி ‘சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க!’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணம் உறுதியானதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’, ‘டான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த சிவாங்கி தனது சினிமா கரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து மூன்றாவது சீசன் வரை கோமாளியாக கலக்கியவர் நான்காவது சீசனில் குக்காக வந்து அசத்தினார். அதனால், வர இருக்கும் ஐந்தாவது சீசனில் சிவாங்கி கோமாளியாக இருப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in