ச்சோ க்யூட்... வளைகாப்பு விழாவில் கணவருடன் சேர்ந்து நடனமாடிய நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை ஸ்ரீதேவி...
நடிகை ஸ்ரீதேவி...

நடிகை ஸ்ரீதேவி, தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் கணவருடன் சேர்ந்து நடனமாடும் க்யூட் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தம்பதியருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

’தங்கம்’, ‘சிவசங்கரி’, ‘இளவரசி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதிகம் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீதேவிக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அசோக் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே சித்தாரா என்ற மகள் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் ஸ்ரீதேவி.

உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் சூழ, வளைகாப்பு நிகழ்ச்சியை மிக எளிமையாக வீட்டிலேயே நடத்தியிருக்கிறார். இந்நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், தன் கணவருடன் இணைந்து நடிகை ஸ்ரீதேவி க்யூட்டாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘ஐந்தாவது மாத பூச்சூட்டல் வளைகாப்பு நிகழ்ச்சி சந்தோஷமாக நடந்தது’ எனக் கூறி வீடியோவை பகிர்ந்திருக்கும் ஸ்ரீதேவிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை தைப்பூசம்... இப்படி வணங்கினால் வாழ்வின் சிக்கல்கள் தீரும்!

பட்ஜெட் 2024: வீட்டுக்கடனில் அதிரடி மாற்றம்... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாற்றங்கள்?!

ஏளனமா பேசுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டிட்டோம்! காதல் ஜோடியின் தன்னம்பிக்கை கதை!

அடுத்த வியூகம்... போயஸ் கார்டனில் குடியேறுகிறார் சசிகலா... ’வேதா இல்லம்’ எதிரே... புது பங்களாவில் இன்று கிரகப்பிரவேசம்!

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in