`நீங்க மாறவே இல்லை மாதவன்’: நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

`நீங்க மாறவே இல்லை மாதவன்’: நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

’நீங்கள் இன்னும் மாறவே இல்லை’ என்று நடிகர் மாதவனை புகழ்ந்திருக்கிறார், நடிகை சிம்ரன்.

நடிகர் மாதவன், இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம், ’ராக்கெட்ரி: நம்பி விளைவு’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இந்தப் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்திருக்கிறார் சிம்ரன். இன்று வெளியாகியுள்ள இந்தப் படம் பற்றி சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், நீங்கள் மாறவே இல்லை மாதவன் என்று கூறியுள்ளார். மாதவனுடன் நடிகை சிம்ரன் ஏற்கெனவே, பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்துள்ளார். ராக்கெட்ரி மாதவனுடன் அவர் நடித்துள்ள மூன்றாவது படம்.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை சிம்ரன், ``பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திரா கேரக்டரை அடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின் மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in