தமன்னா, ராஷி கண்ணாவோடு 90’ஸ் டாப் ஹீரோயின்ஸ்... ’அரண்மனை4’ படத்தில் காத்திருக்கும் சம்பவம்!

Photo-Background-Dark-Gray2
Photo-Background-Dark-Gray2BG

இயக்குநர் சுந்தர்.சி-யின் டிரேட் மார்க் படங்களில் ஒன்றான ‘அரண்மனை4’ ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இதில் தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்திருக்கும் சூழலில், இவர்களோடு 90’ஸ் டாப் ஹீரோயின்கள் இருவரையும் படத்தில் களமிறக்கி இருக்கிறாராம் சுந்தர்.சி.

’சந்திரமுகி’, ‘முனி’, ‘காஞ்சனா’ என தமிழ் சினிமாவில் பேய் ஜானர் கதைகள் எல்லாம் ஒரு சமயத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றது. இந்தப் படங்கள் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் பார்கக்கூடிய ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். அப்படி பேய் ஜானரில் வெளியாகி வெற்றி பெற்ற படம்தான் ‘அரண்மனை’.

அரண்மனை ஒன்றிற்கு குடியேறும் பெரிய குடும்பத்தில் இருக்கும் இளம்பெண்ணை பேய் பிடிக்கிறது. அந்தப் பேய்க்கு ஒரு பரிதாபமான ஃபிளாஷ்பேக் வைத்து அது எப்படி பேயாக இப்போது சம்பந்தப்பட்டவரை பழி வாங்குகிறது என்பதுதான் சுந்தர்.சி இயக்கும் இந்த ‘அரண்மனை’ படத்தின் பொதுவான ஒன்லைன்.

Simran

கவர்ச்சியான ஹீரோயின்கள், கலர்ஃபுல் பாடல்கள், கிச்சுகிச்சு மூட்டும் நகைச்சுவை காட்சிகள், நெஞ்சை பிழியும் ஃபிளாஷ்பேக் என இந்த டெம்ப்ளேட்டை வைத்து கதையில் உள்ள லாஜிக் ஓட்டையை மறைத்து இதுவரை மூன்று சீசன்கள் இயக்கி கல்லா கட்டினார் சுந்தர்.சி. இந்த வரிசையில் இதன் நான்காவது பாகமாக ‘அரண்மனை4’ ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

இதில் ஹீரோயின்களாக தமன்னா, ராஷிகண்ணா நடித்திருக்கிறார்கள். படத்தில் இருந்து இருவரின் கிளாமர் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஒரு புரோமோஷன் பாடலுக்காக நடிகைகள் குஷ்பு மற்றும் சிம்ரன் இணைந்து நடனமாடியுள்ளார்கள். இந்தப் படத்தில் முதலில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருந்து பின்பு தேதி பிரச்சினைகள் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக சுந்தர்.சி நடித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in